டங்ஸ்டன் சுரங்க உரிமம் ரத்து செய்யக்கோரி…!! கனிமொழி எம்.பி நோட்டிஸ்…!!
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி இந்திய கூட்டணி சார்பில் நோட்டீஸ் அளித்துள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்கு ஊராட்சி கூட்டத்தில் பங்கேற்ற வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என உறுதியளித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நோட்டீஸ் விடுத்துள்ளனர். மேலும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் மணிப்பூர் பற்றிய விவாதத்தை நடத்த வேண்டும் என்றும், இந்த கனிம வள மசோதாவே அதானிக்காக இந்நாட்டின் கனிம வளங்களை வாரிக்கொடுக்கும் முயற்சி என்றும், 28.07.2023 அன்றே நாங்கள் இதை எதிர்த்துப் போராடினோம்.
டங்ஸ்டன் உள்ளிட்ட “பகுதி-D” கனிமங்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவந்த இந்த மசோதாவை மாநிலங்களவையில் அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் இன்று டங்ஸ்டன் விவகாரமே வந்திருக்காது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்துப் போராடியது இந்த காணொளியில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எப்போதும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார் என்றும், எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதற்காக மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என இவ்வாறே கனிமொழி எம்.பி பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..