அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு..!! இந்திய கூட்டணி எம்.பிக்கள் போராட்டம்…!!
அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்து கூறிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் MP க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் …
மக்களவையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மைக்காலமாக அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது ஃபேஷன் ஆகிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் எனவும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அம்பேத்கரை ஒன்றிய அமைச்சர் அவமானப்படுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர் …
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..