சுகப்பிரசவம் நடக்கணுமா..? கண்டிப்பா இதை ட்ரைப் பண்ணுங்க..!
வெட்டுக்காயம் குணமாக:
வெட்டுக்காயம் குணமாக நாயுருவி இலைகளுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது பூசி வர சீக்கிரம் ஆறிவிடும்.
உடல் சக்தி பெற:
இரவில் வாழைப்பழம் இரண்டு மற்றும் ஒரு மூடி தேங்காய் சாப்பிட்டு வர உடலுக்கு சக்தி கிடைக்கும்.
இரத்த சோகையை போக்க:
இரத்த சோகை குணமாக பீர்க்கங்காய் வேர்க் கசாயம் சாப்பிட்டு வரலாம்.
கர்ப்பிணிகளுக்கு சிறந்தது:
தினம் ஒரு மாம்பழம் என சாப்பிட்டு வர பிறக்கப்போகும் குழந்தை நல்ல ஊட்டமாகவும், கால் கை நடுக்கம், மயக்கம் ஆகியவை இருக்காது.
வாழைப்பழம்:
தினம் ஒரு செவ்வாழை என சாப்பிட்டு வர தொற்று நோய்கள் அணுகாது.
குழந்தைகளுக்கு:
குழந்தைகளை கொய்யாப்பழம் சாப்பிட வையுங்கள். இதனால் எலும்புகள் பலமாகிறது. உடல் வளர்ச்சி அடைகிறது. வயிற்றில் இருக்கும் புண் குணமாகிறது.
முகம் வழுவழுப்பாக இருக்க:
எருமை தயிரில் கசகசாவை அரைத்து இரவில் முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாகவும் சுருக்கங்கள் மறைந்தும் காணப்படும்.
உடல் அரிப்பு சரியாக:
பசும்பால் சேர்த்து வன்னி மரத்தின் இலையை அரைத்து சாப்பிட உடலில் இருக்கும் அரிப்பு சரியாகும்.
சுகப்பிரசவம்:
ரோஜா இதழ்கள், ஆப்பிள் பழம், தேன், ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை கலந்து ஒரு மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும்.
நெஞ்சுவலி குணமாக:
அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட நெஞ்சுவலி ஏற்படாது. அத்திப்பழம் இருதயத்தை பலமாக்குகிறது.
காதில் சீழ் வடிதலை குணமாக்க:
வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சியப்பின் ஆறவைத்து காலை மற்றும் மாலையில் காதில் இரண்டு சொட்டி விட்டு வர சீழ்வடிதல் குணமாகும்.