யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை..!
நம் உடல் ஆரோக்கியமாகவும் நல்வாழ்வுக்கும் நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சியும் முக்கியம். உழைக்கும் செயலுக்கு ஏற்ப உணவு உட்கொள்ள வேண்டும். உழைப்பே இல்லாமல் அதிகமான உணவு உட்கொள்ளும்போது அது உடலுக்கு கெடுதலைத்தான் உண்டாக்கும்.
அந்த உடற்பயிற்சியில் வருவது தான் யோகாசனமும் ஒன்றாகும். அந்த யோகாசனம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- காலையில் மணி 4 முதல் 6 மணி வரை யோகாசம் செய்ய சிறந்த நேரமாகும். காலையில் எழுந்து காலை கடனை கழித்த பிறகு யோகாசனம் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
- யோகாசனம் செய்யும் இடம் நல்லா காற்றோட்டமாக இருக்க வேண்டும். கீழே தரைவிரிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- யோகாசனைத்தை மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டும். அவசர அவசரமாக செய்தால் அது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
- ஒவ்வொரு ஆசனம் செய்த பிறகும் கட்டாயம் சாந்தியாசனம் செய்தல் வேண்டும். கட்டாயம் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
- யோகாசனம் செய்யும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி செய்தல் மிகச்சிறப்பு.
- காலையில் குளித்துவிட்டு யோகாசனம் செய்தல் நல்லது. கண்ணாடி போட்டுக்கொண்டு யோகாசனம் செய்யக்கூடாது.
- யோகாசனம் செய்யுமிடம் நல்லா நறுமணமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். யோகாசனம் செய்யும்போது அமைதியாக பேசாமல் செய்வது சிறப்பு.
- ஆசனம் செய்யும்போது மூச்சை தம் பிடிக்கக்கூடாது. நல்லா சீரான சுவாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தியானம், உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றை அடுத்தடுத்து செய்தல் கூடாது. யோகாசனம் வெட்டவெளியில் செய்வதை தவிர்த்துவிட்டு மேற்கூறை போட்ட இடத்தில் செய்வது சிறப்பு.
- கர்பிணிகள், மாதவிடாய் காலம் மற்றும் உடல்நிலை சரியில்லாதபோது யோகாசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
- நீண்ட பயணம், கண்விழிப்பு, சாப்பிட்ட உடனே யோகாசனம் செய்யக் கூடாது.
- இதய சிகிச்சை மற்றும் வேறு அறுவை சிகிச்சை செய்தவர்கள் சர்வாங்கசனம், சிரசாசனம், மயூராசனம் ஆகிய கடுமையான ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.