மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்டம்…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கம்…!!
தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் தொடக்க விழா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை தந்துள்ளார்.முன்னதாக நேற்று மாலை மாலை 4.30 மணி அளவில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பார்க்கை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இன்று காலை காமராஜ் கல்லூரிக்கு சென்று 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 32 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை பரிசாக வழங்கினார். முன்னதாக 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து 10 மாணவிகளுக்கு அதற்காக அட்டையை வழங்கினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..