உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தென்றல் ஏஜென்சி கடையின் மற்றும் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாரதாரத்திற்காகவும் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டியும் ஆட்டோ ஓட்டுனர் பொதுநல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் :
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளரின் செல்போனை பறித்துச்சென்ற இளைஞர்கள் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இளைஞரை வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் :
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 2000ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டாவை ஆன்லைனில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் :
தர்மபுரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..