சித்தராமையா முடா வழக்கு விசாரணை..!! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!
மைசூர் மாநகராட்சி வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் அடுகடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. ஆனால் சித்தராமையா தரப்பில் தன்னுடைய மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும். மூடாவின் சட்ட விதிமுறைகள் பின்பற்றி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
மேலும் நான் முதல்வராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. பாஜக ஆட்சி காலத்தில் தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதேசமயம் இந்த முறைகேடு விவகாராத்தில்.., முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளத எதிர்கட்சிகள், “முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில் அது தொடர்பாக பெங்களூர் வழக்கறிஞர் பிரதீப்குமார், லோக் அயுக்தாவில் புகார் கொடுத்துள்ளார்.., அதனிடையே வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து சித்தராமையாவிற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் ஜூலை 26-ம் தேதி, முதலமைச்சர் சித்தராமையா விளக்கம் தர கோரி ஆளுநர் கெலாட் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அத்துடன் கர்நாடகா அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னணியில் முதலமைச்சர் சித்தராமையா விற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து ஆளுநர் கெலாட்டை வழக்கறிஞர் பிரதீப் குமார், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூர் சினேகமயி கிருஷ்ணா ஆளுநரை சந்தித்து கொடுக்கப்பட்ட உத்தரவின் நகலை மீண்டும் திரும்ப பெற்றுள்ளனர். அதனை கர்நாடகா மாநில தலைமைச் செயலாளரிடமும் கொடுத்திருந்தது.
இதனை அடுத்து முதல்வர் சித்தராமையா மீதான முடா ஊழல் வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தில் வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென லோக் ஆயுக்தாவிடம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது பூதாகரமாக வெடித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..