முதலமைச்சர் அடுத்த கள ஆய்வு..? அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு..!!
நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை மாவட்டந்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கள ஆய்வு செய்தும், திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் பிப்ரவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 6 ஆயிரத்து 187.46 கோடியில் புதிய திட்டங்களையும் முடிவுற்ற திட்டப் பணிகளையும், 4 ஆயிரம் கோடியில் டாடா சோலார் உற்பத்தி நிலையத்தையும் முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..