உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
திருவள்ளூரில் புகழ்பெற்ற வீரராகவர் கோவில் தை பிரம்மோற்சவ விழா ஹம்ச வாகன புறப்பாடு நடைபெற்றது. இதில் ஹம்ச வாகனம் மற்றும் கருட சேவையும் நடத்தப்பட்டது. பின் பெருமாள் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தனியார் பள்ளி மைதானத்தில் தேசிய பெண்குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 வடிவத்தை உருவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 6ம் மற்றும் 10ம் வகுப்பு மாணவிகள் 1098 எண் வடிவில் நின்று உலக சாதனை நிகழ்த்தினர். இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயப்போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டிகளுக்கு 12 கிலோமீட்டர் தூரமும் சிறிய மாட்டு வண்டிகளுக்கு ஒன்பது கிலோ மீட்டர் தூரமும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில் செங்கல் சூளையில் அனுமதியின்றி மண் கடப்படுவதாக காவேரிப்பாக்கம் காவத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் காவலர்கள் நடத்திய சோதனையில் கன்னியப்பன், கார்த்திக், அஜித்குமார் மற்றும் இரண்டு மருத்துவரையும் கைது செய்து, ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தில் தப்பி ஓடிய ராஜ்குமார் மற்றும் நரசிம்மன் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
அரியலூர் திருச்சி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் நெகிழி கழிவுகளை சேகரித்தல், பொதுஇடங்களை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி துவக்கி வைத்தார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து கொண்டு மஞ்சப்பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..