உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்..!!
வேலூர் மாவட்டம் வள்ளி மலை கோவிலில் தை கிருத்திகை முன்னிட்டு முருகப் பெருமான் விபூதி காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தை கிருத்திகையை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த விவசாயி தரணிராஜன். என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் மின் கசிவு ஏற்பட்டு தீபற்றியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 3 ஆயிரத்து 500 கோழிகள் உட்பட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பண்ணை கொட்டகைகள் சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமரபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தேவி மற்றும் DNC உள்ளிட்ட 2 திரையரங்கில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் பட்டாசு வெடித்தும் நடனமாடியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்கதலைவரும் முன்னாள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.குருவின் பிறந்தநாளையொட்டி அவரது முழுவுருவ வெண்கல சிலையை அவரது மகனும் மாவீரன் மஞ்சள் படையின் தலைவருமான கனலரசன் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவர் ஆலங்காயம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சியாமளா விவசாய நிலத்தில் மின்மோட்டாரை இயக்க சென்ற போது, எதிர்பாராத விதாமக கிணற்றில் விழுந்து உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டியும் ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..