நீங்கள் பார்க்க மறந்த முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
வேலூர் மாநகரத்துக்கு உட்பட்ட மைய பகுதியில், காலியாக இருந்த வீட்டில் ஆறு அடி நீளம் கொண்ட பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், பாம்பு பிடிப்பவர் மூலம் அதனை பிடித்து வனப்பகுதிக்கு எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் அவசர காலங்களில் விபத்து நேரிட்டால் தற்காத்துக்கொள்ளும் முறை மற்றும் பாதிப்புகளை தடுக்கும் முறை குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கல்லூரியில் தனிநபர் ஒருவர் அவரது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்து வருவதாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சண்முகம் கஞ்சா செடி வளர்தது தெரிய வந்தது இதனை அடைத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் வேலம் வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் உதவியாளர் விஜயகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணல் கடத்தி சென்ற லாரியை தப்பி சென்றுள்ளனர். ஓட்டுநர் தப்பி சென்ற நிலையில் வாலாஜா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த பெண்ணை சிறுத்தை தாக்க வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கஸ்தூரி மற்றும் லட்சுமி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..