“அதே கடை.., அதே சாக்லேட்…” சாக்லெட் பிரித்த போது காத்திருந்த அதிர்ச்சி…!!
மயிலாடுதுறையில் பிரபல ஷாப்பிங் மாலில் வாடிக்கையாளர் வாங்கிய சாக்லேட்டில் நெலிந்த பூச்சி , ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அதே சர்ச்சையில் ஷாப்பிங் மால் சிக்கியதால் பரபரப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மனக்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். தொடர்ந்து தனது மகளின் பிறந்த நாளுக்காக மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் இயங்கி வரும் பிரபல தனியார் ஷாப்பிங் மாலான குறிஞ்சி மெட்ரோ, ஷாப்பிங் மாலில் வாங்கிய சாக்லேட் பாக்ஸை (டியூக்ஸ் டிரஃபல்) இரண்டு தினங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார்.
தொடர்ந்து மகளின் பிறந்தநாளினை முன்னிட்டு இன்று சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கிய போது அதில் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காலாவதி தேதியை பார்த்தபோது கடந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தயாரிக்கப்பட்ட இந்த சாக்லேட் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதியோடு காலாவதியானது.
உடனடியாக பூச்சி நெளிந்த சாக்லேட் உடன் கண்ணதாசன் கடைக்கு வந்து விளக்கம் கேட்டபோது அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் இதுபோன்ற பிரச்சனை இதன் பிறகு நடக்காது என உறுதியளித்து கண்ணதாசனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இது ஒரு புறம் இருக்க இதே கடையில் கடந்த மாதம் 5ஆம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சாக்லேட்டில் பூச்சிகள் நெளிந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது வாடிக்கையாளர் வாங்கிய சாக்லேட்டும், தற்போது நடைபெற்றுள்ள சம்பவத்தில் வாடிக்கையாளர் வாங்கிய சாக்லேட் ஒன்றுதான் என தெரியவந்துள்ளது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், அதே கடையில் அதே சாக்லேட்டில் அதே பூச்சி மீண்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்… மேலும் இதுகுறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்..
எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் அடிக்கடி புகார்கள் எழுந்து வரும் இதுபோன்ற ஷாப்பிங் மாலில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை உரிமையாளர்களின் மீது எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..