கத்தி முனையில் மிரட்டல்…!! வேலை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!
ஒடிசா மாநிலத்தில் இருந்து திருப்பூர் வேலைக்காக குடும்பத்துடன் வந்த பெண்ணை 17 வயது சிறுவன் உள்பட மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. ஒடிசா மாநில 17 வயது சிறுவன் உள்பட மூன்று பேர் கைது…
ஒடிசா மாநிலத்தில் இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு ரெயிலில் 27 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் கடத்த 17ஆம் தேதி இரவு திருப்பூர் வந்துள்ளனர். இவர்கள் இரவில் எங்கு செல்வது என தெரியாமல் நின்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது நதிம்(24), முகமது டேனிஸ்(25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு தங்கள் அறையில் தாங்கிக் கொள்ளலாம் என ஆறு பேரும் இரவு உணவு உட்கொண்டு விட்டு அறையில் தூங்கி உள்ளனர். திடீரென கத்தியை காட்டி பெண் மற்றும் கணவரை மிரட்டி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். அங்கிருந்து வெளியேறிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வடக்கு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு மகளீர் போலீசார் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவன் உற்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்டவர்கள் மீது உயிருக்கு பயத்தை ஏற்படுத்துதல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..