நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சிறுப்பாக்கம் சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி கள ஆய்வு மேற்க்கொண்டார், அப்பொழுது, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தயார் செய்யப்படும் உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள உரங்கள் இருப்பு குறித்து, கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வில் அனைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் சி.எம்.சி தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவரை கடத்தி சென்று கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன், பரத், சந்தோஷ் ஆகிய 4-பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25-ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், ஐந்தாவது நபரான 17-வயது சிறார்க்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 23,000 அபராதம் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மின்னணு சாதனங்கள் மற்றும் பணம் என்னும் இயந்திரங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை தனக்கன்குளம் பகுதியில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மூன்று ஆண்டுகளாக அளித்த மனு தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, கோரிக்கைளை நிறைவேற்றி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..