கெட்அவுட் என்ற வார்த்தைக்கு அவர் மட்டுமே தகுதியானவர்…!! அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்…!!
கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் பிதற்றளோடு கூறித்துத் திரிவதை எந்நாளும் திமுக அனுமதிக்காது. இவரின் இதுபோன்ற கூற்றுகளால் இன்னும் இந்த இயக்கம் வீறுபெறும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு வருடத்திற்கு தினம்தோறும் காலையில் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” என்ற பெயரில் காலை உணவு தரும் திட்டத்தை நேற்று துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இரண்டாவது நாளான இன்றைக்கு கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனிப் பகுதியில் உணவு வழங்கி நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,
தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று ஜெகநாதன் தெருவில் காலை சிற்றுண்டி ஆயிரம் பேருக்கு வழங்கும் நிகழ்வை அண்ணியார் துவக்கி வைத்தார்கள். இரண்டாவது நாளாக ஜிகேஎம் காலனி பகுதியில் அமுத கரங்கள் என்ற தலைப்பில் காலை சிற்றுண்டி வழங்குகிறோம். அறிவித்தபடி 365 நாட்கள் இந்த நிகழ்ச்சி. இதுதிட்டத்தால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியுடைகிறார்கள்.
காலை சிற்றுண்டி வழங்கும் இடத்தை ஒரு நாள் முன்கூட்டியே அந்த பகுதியில் தெரிவித்து விடுவதால், பொதுமக்கள் இந்த சிற்றுண்டியைப் பெற்று மகிழ்ச்சியடைகிறார்கள். தமிழகத்தில் இல்லாமையை நீக்குவோம், வயிற்றுப் பசியை இல்லாமல் செய்வோம் என்ற இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருக்கிறது.
கர்நாடகத்தில் போலீசாக இருந்தது போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கர்நாடக போலீஸ் கிடையாது.
அண்ணா சாலை என்ற பகுதியில் தான் அண்ணா அறிவாலயம் அமைந்திருக்கிறது என்பதைத்தான் துணை முதலமைச்சர் கூறினார். அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற செங்கற்களை ஒவ்வொன்றாக பிடுங்கும் பணி நிறைவடையும் வரை நான் ஓயமாட்டேன் என்று சொல்லி இருந்ததற்கு தான் உதயநிதி இந்த பதிலை கூறியிருந்தார். இப்போதும் சொல்கிறோம் *தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்திருக்கிற அண்ணா அறிவாலயத்தில் ஒரு செங்கலயாவது அவர் தொட்டுப் பார்க்கட்டும்.
இந்த இயக்கம் நீர் பூத்த நெருப்பு. நெருப்பு ஆற்றில் பயணத்த இயக்கம். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல. 75 ஆண்டுகளைக் கடந்து திராவிட மாடல் ஆட்சியை ஏற்படுத்தி இருக்கிற இரும்பு மனிதர் முதல்வர் தலைமையில் இருக்கிற இயக்கம். மிசா என்ற கொடுஞ்சிறையில் கொள்கைக்காக சிறையில் இருந்தவர். அவர் வழி வருகிற லட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கிறவரை ஓர் அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.
கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் பிதற்றளோடு கூறித்துத் திரிவதை எந்நாளும் திமுக அனுமதிக்காது. இவரின் இதுபோன்ற கூற்றுகளால் இன்னும் இந்த இயக்கம் வீறுபெறும்.* இந்த இயக்கத்தின் தொண்டர்கள் நான்கு கால் பாய்ச்சலில் இருந்து எட்டு கால் பாய்ச்சலை நோக்கிச் செல்வார்கள்.
பொன் ராதாகிருஷ்ணன் விமர்சனம் குறித்த கேள்விக்கு,
அண்ணா அறிவாலயத்திற்கு இயக்கத்தில் சேர வரலாம், நட்பு பாராட்ட வரலாம். ஆனால் அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்களை பிடுங்கி எடுத்து விடுவேன் என்று சொன்னால் அவரை எப்படி அனுமதிக்க முடியும்.* வயது முதிர்ந்த ஒரு அரசியல்வாதி அவர். அவர் மீது நாங்களும் எங்கள் முதல்வரும் மரியாதை வைத்திருக்கிறார். *வயது முதிர்ந்து ஒருவர் ரெட் லைட் ஏரியா என்று குறிப்பிடுவது அவர் எண்ணங்கள் என்ன பிரதிபலிக்கிறது என்று காட்டுகிறது.*
கெட்அவுட் ஸ்டாலின் என்ற hashtag அவர்கள் போடட்டும், மக்கள் எந்த அளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று பார்க்கட்டும். ஏற்கனவே பாரதிய ஜனதா அனுபவித்தது கோ பேக் மோடி என்பதை மீண்டும் அவர்களே அதை கையில் எடுக்கிறார்கள்.
கெட்அவுட் என்ற வார்த்தைக்கு உகந்த ஒருவர் உண்டென்றால், அது ஒன்றியப் பிரதமர் தான் என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..