முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள்…!! அரசியல் தலைவர்கள் வாழ்த்து…!!
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில், தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழட்டும். என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எனது சகோதரரும், தமிழக முதலமைச்சருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெறட்டும்.
அதேபோல் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் தளபதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என இவ்வாறே பதிவிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..