ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்…!! திமுக எம்.பி.கனிமொழி பேச்சு..!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மணிப்பூர் நிலவரம், வாக்காளர் பட்டியல் குளறுபடி விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
இதில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது குறித்து விவாதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது, ஒன்றிய அரசின் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்பதற்காக, நிதி விடுவிக்காததை ஏற்க முடியாது என்றும், பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுவதாக சாடினார்.
இதற்கு ஒன்றி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவது என தவறாக பரப்புரை செய்யப்படுவதாக தெரிவித்தார். இவரின் பதிலை ஏற்க மறுத்து திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கமிட்டனர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பி.க்கள் ஒருபோதும் கூறியது இல்லை என்றும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..