புதுச்சேரி தனியார் பள்ளி பாலியல் வழக்கு…!! சிபிஐக்கு மாற்ற மாணவர்கள் கோரிக்கை..!!
புதுச்சேரியில் 6-வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் மூடப்பட்ட தனியார் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும், இவ்வழகை சிபிஐ விசாரணை நடத்த கோரியும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதுச்சேரி கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி தானாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படிக்கும் 6- வயது சிறுமிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளியில் இருந்த ஆசிரியரை, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஆசிரியர் மீது போஸ்கோ வழக்கு பதிவு செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே தனியார் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து சூறையாடப்பட்ட நிலையில் பள்ளியை தற்காலிகமாக சீல் வைக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்கக்கோரியும், பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை சிபிஐ விசாரணை நடத்தக்கோரி 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளி சீருடையுடன் ஆசிரியர்களுடன் இணைந்து தவளகுப்பம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் தாசில்தார் பிரித்திவி பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து 2-மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியலை தற்காலிகமாக கைவிட்டு மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்த சாலையோரம் காத்திருக்கின்றனர்.
இதனிடையே மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் பள்ளியை திறக்க கூடாது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நிலையில் எப்படி 1-ஆம் வகுப்பு படிக்கும் பாலியல் துன்புறுத்தல் அளித்த இருக்க முடியும் என்றும் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை சிபிஜ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..