நீங்கள் பார்க்க மறந்த உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
திருப்பூரில் வேலைக்காக வட மாநிலத்தில் இருந்து வர கூடிய நபர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,கஞ்சா பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து அவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையம் அருகே வட மாநிலத்தை சேர்ந்த நபரிடம் விசாரணை மொற்கொண்ட போது அவரிடம் இருந்த கைப்பையில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது தொடர்ந்து அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து விசாரணை மொற்கொண்டதில் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்து திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருபவர்களிடம் கஞ்சாவை விற்பனை செய்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 10 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான 10 இருசக்கர வாகனங்களை திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினர். இதில் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
மயிலாடுதுறை காவிரிக்கரையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 133-ஆம் ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி பொதுமக்களை உற்சாகப்படுத்தியது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிறிஸ்டி பாரா மெடிக்கல் மற்றும் நர்சிங் தனியார் கல்லூரியின் தாளாளரும் அதிமுகவில் இளைஞர் பாசறை அமைப்பாளருமான விஜய்சீகன்பால் என்பவர் அவருடைய கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மாணவியை கடந்த ஜனவரி மாதம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கல்லூரி மாணவி ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் மேற்கொண்ட விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விஜய்சீகன்பால் மீது வழக்கு பதிவு செய்து காவலர்கள் தேடிவந்தனர் இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜய்சீகன்பால் திருப்பத்தூர் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை வன அலுவலர் ரகுபதி என்பவருக்கு அரசு வழங்கிய துப்பாக்கி திடீரென காணாமல் போயுள்ளது. இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வன அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்திருத்த துப்பாக்கியை வன அலுவலருக்கு தெரியாமல், வனக்காப்பாளர் முனியப்பன் எடுத்து சென்று அவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வன அலுவலர் ரகுபதி செங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து வன காப்பாளர் முனியப்பனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் வன அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார் பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதிக்கு இரு மகன்கள் இருந்தும் தனியாக வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் தன்னுடைய தாயுடன் ஒரே வீட்டில் வசிப்பதற்காக, மூத்த மகன் அதே பகுதியில் வேறொரு வீட்டுக்கு செல்வதற்காக பொருட்களை இடமாற்றி வந்துள்ளார். அப்போது சரஸ்வதி தனது பேரனிடம் பொருட்களை எடுக்க சொல்லி கண்டித்ததாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருகே இருந்த அரிவாள் மனையை எடுத்து பாட்டியை ஸ்ரீதர் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பாட்டியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த தளவாய் புரம் காவல்துறையினர் ஸ்ரீதரை கைது செய்தனர். மூதாட்டி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..