நடிகர் விஜய்க்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவசர் ஒருவர் ஃபாட்வா பிறப்பித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி பரேல்வி நடிகர் விஜய் பற்றி பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இவர், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் கூறியதாவது,
‘தமிழ்நாட்டைச் சேர்ந்த சன்னி முஸ்லிம்களின் வேண்டுகோளின் பேரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எதிராக ஃபத்வா பிறப்பித்துள்ளேன். இவர் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி முஸ்லிம்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறார். எனினும், விஜய் தனது படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் மோசமானவர்களாகவும் சித்திரித்து காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.‘
இவரது கட்சி நடத்திய இப்தார் விருந்தில், சூதாட்டக்காரர்கள் , மது அருந்துவர்கள் கூட அழைக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டிலுள்ள சன்னி முஸ்லிம்கள் விஜய் மீது கோபத்தில் உள்ளனர். அவர்கள் என்னிடத்தில் விஜய்க்கு எதிராக ஃபாட்வா பிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டனர். எனவே, விஜய்யுடன் இணைந்து முஸ்லிம்கள் செயல் படக் கூடாது ‘என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிராகவும் இவர் ஃபாத்வா பிறப்பித்திருந்தார். அதோடு, வக்பு போர்டுக்கு சொந்தமான நிலத்தில் மகாகும்பமேளா நடந்து வருவதாகவும் பேசி இவர் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.