காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தஞ்சையை பூர்விகமாக கொண்ட கணேச சர்மா டிராவிட் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி, விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தீட்சை வழங்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி சங்கர மடம் கிமு 482ம் ஆண்டு ஆதி சங்கரச்சாரியரால் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த மடத்தின் பீடாதிபதியாக விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளார். எனவே, இளையமடாதிபதியை நியமிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, டுட்டு சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமணிய கணேஷ சர்மா டிராவிட் என்பவர் இளைய மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். வரும் மே 2ம் தேதி ஆதிசங்ரச்சாரியாவின் 2534 பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏப்ரல் 30ம் தேதி கணேச சர்மா இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார்.
டுட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா, ஆந்திராவில் உள்ள துனியில் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணிய தன்வந்திரி. இவர் அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்தியநாராயண சுவாமி கோவிலில் விரத புரோகிதராக பணியாற்றி வருகிறார். தாயார் அலிவேலு மங்காதேவி. ,இவர்களது பூர்வீகம் தஞ்சை என்றும் சொல்லப்படுகிறது.
இவர் புனித நகரான ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள அன்னவரத்தில் ரிக் வேதம் உள்ளிட்ட பல்வேறு வேதங்களை கற்று தேர்ந்தவர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் உள்ள பசாராவில் உள்ள புகழ்பெற்ற ஞான சரஸ்வதி கோவிலில் இவர், சேவை செய்து வந்தார். குழந்தைகளை தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்படுவதற்கு முன்பு இந்த கோயிலுக்கு பெற்றோர் அழைத்து வந்து வழிபட வைப்பார்கள். இந்த கோயிலில் பிரார்த்தனை செய்து பள்ளியில் சேரும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதும் நம்பிக்கை.
தற்போதைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேகம் செய்யப்பட்டார். காஞ்சி மடத்துக்கு இளைய மடாதிபதி அறிவிக்கப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது