ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 209 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணி வீரர் 14 வயதே ஆன பாலகன் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசி வரலாற்று சாதனை படைத்தார். ஐ.பி.எல்.லில் மிக வேகமாக சதமடித்த முதல் இந்தியர் இவர்தான். முன்னதாக, கெயில் 30 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
கடந்த 2010ம் ஆண்டு யூசுப்கான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய போது, மும்பை அணிக்கு எதிராக 37 பந்தில் 100 ரன்கள் அடித்தார். ஐ.பி.எல் தொடரில் இந்தியர் ஒருவரின் வேகமான சதம் இதுதான். தற்போது, வைபவ் வைபவ் 35 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார்.
தற்போது, அவருக்கு 14 வயது 32 நாட்கள்தான் வயது. இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் அவருக்கு கிடைத்துள்ளது. 13 வயது வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். ராஜஸ்தான் அணியில் இணைந்த பிறகு தான் இந்த மாத தொடக்கத்தில் அவருக்கு 14 வயது பிறந்தது.
பீகாரிலுள்ள தாஜ்பூர் என்ற கிராமத்தில் 2011ம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி விவசாயியான சஞ்சீகவ் சூர்யவன்ஷியின் மகனாக பிறந்தார். தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி. மகனின் கிர்க்கெட் ஆர்வத்தை கண்டு ஊக்கமளித்தார். தனது தோட்டத்தை விற்று மகனை கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து பயிற்சி பெற வைத்தார். விளைவாக மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உருவெடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி. 12 வயதாக இருக்கும் போதே பீகார் அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட தொடங்கி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.