பஞ்சாப்பை சேர்ந்தவர் தேவேந்திர சிங். இவர், ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக உள்ளார். இவரது மகள் வான்ஷிகா கனடாவில் படித்து வந்தார். பள்ளி படிப்பை பஞ்சாப்பில் முடித்த பிறகு கடந்த இரண்டவரை வருடங்களாக கனடாவில் ஒட்டவா நகரில் வான்ஷிகா மேற்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 25ம் தேதி இரவு வான்ஷிகா காணாமல் போனார். இந்த நிலையில், ஓட்டவா நகரில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கட்ற்கரையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து ஒட்டவா போலீசார் கூறுகையில், கடந்த 25ம் தேதி இரவு 9 மணியளவில் தான் தங்கியிருந்த வீட்டை விட்டு வான்ஷிகா வெளியே சென்றுள்ளார். மீண்டும் அறைக்கு திரும்பவில்லை. அடுத்தநாள் முக்கியமாக ஒரு தேர்வையும் எழுத அவர் செல்லவில்லை. இதையடுத்து, நண்பர்களும் குடும்பத்தினரும் அவரை தேட தொடங்கினர். இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
வான்ஷிகாவுக்கு 21 வயதாகிறது. தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு எங்கள் மகள் கோழை அல்ல. அவரை, யாரோ கொலை செய்துள்ளனர் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.