சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, (ஏப்ரல் 1) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,560 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 30 ரூபாய் குறைந்து 6,014 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 48,112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 200 ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையக் காரணமாக அமைந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை குறைந்துள்ளது.