கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 3) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 5,535 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 44,280 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 25 ரூபாய் குறைந்து 5,989 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 47,912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 60 காசுகள் குறைந்து 77 ரூபாய் 10 காசுகளுக்கும், கிலோவிற்கு 600 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு முதலீட்டாளர்கள் கவனத்தை திசை திரும்பியுள்ளதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து விலை தொடர்ந்து சரிந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.