வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களையும், இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (ஏப்ரல் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 5,680 ரூபாயாகவும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 45,440 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 54 ரூபாய் அதிகரித்து 6,196 ரூபாய்க்கும், சவரனுக்கு 432 ரூபாய் அதிகரித்து 49,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து 81 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரம் 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது