29 Total Views , 1 Views Today
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தை சுற்றி எப்போதுமே பரபரப்பான போக்குவரத்து நெரிசல் காணப்படுவது வழக்கம். குறிப்பாக காலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் பரபரப்பாக சென்று கொண்டிருப்பார்கள்.
இந்த நேரத்தில் மது போதையில் பெண்மணி ஒருவர் நடுரோட்டில் படுத்து தகராறு செய்வது, பேருந்துகள் முன்னால் நின்று நடனமாடுவது என அலப்பறை செய்துள்ளார். காவல்துறையினர் எவ்வளவு சொன்னாலும் அதனை காதில் வாங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் டூவிலரை வழிமறித்து ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
போலீஸ்காரர்கள் சாலையை விட்டு ஓரமாக போய் நிற்கச் சொன்னால், உங்களுக்கு போக்குவரத்தை தானே சரி செய்யணும்… அதையும் நானே செய்கிறேன் என போற வர்ற வண்டிகளை மறித்து ரகளை செய்துள்ளார். உடனே அங்கிருந்த பொதுமக்களும், காவல்துறையினரும் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயல, சாலையில் படுத்துக்கொண்டு அவர்களை ஒருமையில் திட்டி வாக்குவாதம் செய்துள்ளார்.
கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு ரகளையில் ஈடுபட்ட வந்த நிலையில், அங்கு வந்த மகளிர் போலீசார் அந்த பெண்மணியை வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தி, விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பெண்மணி திருப்பூரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பதும், தனது கணவர் இறந்ததில் இருந்து குடிக்கு அடிமையானதும் தெரியவந்துள்ளது.
குடிபோதையில் நடுரோட்டில் சேட்டை செய்த பெண்#pollachi #Drunken pic.twitter.com/yz1AkRzHeh
— A1 (@Rukmang30340218) April 13, 2023