வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது. குறிப்பாக இன்றும், நாளையும் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது நடுத்தர குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 5,605 ரூபாயாகவும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 44,840 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அதேபோல்24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 60 ரூபாய் குறைந்து 6,119 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 48,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமிற்கு 90 காசுகள் குறைந்து 80 ரூபாய் 40 காசுகளுக்கும், கிலோவிற்கு 900 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.