269 Total Views , 2 Views Today
பனங்கற்கண்டில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..!
பனை மரத்தில் இருந்து தயார் செய்யப்படும் , பனங்கற்கண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாகும்.
பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு இருப்பதால் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தது.
பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே ஆஸ்துமா, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் பனங்கற்கண்டை வாயில் வைத்துக்கொண்டு, உமிழ் நீரை விழுங்கினாள். தொண்டை கரகரப்பு நீங்கும். சளி, இரும்பல் போன்றவற்றை சரி செய்து விடும்.
அரை தேக்கரண்டி பசு நெய்யுடன் பனங்கற்கண்டு, வேர் கடலை சேர்த்து வதக்கி சாப்பிட்டால், உடல் சோர்வு நீங்கிவிடும். மார்பு சளி இருப்பவர்கள் 2 பாதம், சிறிது பனங்கற்கண்டு, தேவையான அளவு மிளகு சேர்த்து மிக்சியில் அரைத்து பொடி செய்து, பாலில் கலந்து சாப்பிட்டால் சளி அறவே ஒழிந்துவிடும்.
இரவில் சாப்பிடுவதற்கு முன் பாதம், பனங்கற்கண்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் கண் பார்வை சீராக இருக்கும்.
பனங்கற்கண்டு, சீரகம், பாதம் சேர்த்து இரவில் உறங்குவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும்.
பனங்கற்கண்டு, பாதம், மிளகு தூளில் கலந்து. வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் எந்த நோயும் வராது. என மருத்துவர் பாலாஜி கூறினார்.