உதடு வெடிப்பை தடுக்க இந்த மேஜிக் ட்ரை பண்ணுங்க ..!
இயல்பாகவே பலருக்கு வறட்சி உதடு இருக்கும். கோடை காலம் என்றால் இன்னும் அதிகம் வறண்டு விடும்.., அந்த வறண்ட உதட்டை நீக்க சில டிப்ஸ்
உதடு வறட்சியை நீக்க SPF உடன் ஈரபதம் அளிக்கும் லிப்பாம் களை பயன்படுத்தலாம். லிப்பாம் களை வாங்கும் பொழுது, அது இயற்கை பொருட்களில் தயார் செய்யப்பட்டவையா என பார்த்து வாங்க வேண்டும்.
சிலருக்கு லிப்பாம், லிப்ஸ்டிக் உபயோகிப்பது பிடிக்காத ஒன்றாக இருக்கும், அவர்கள் உதட்டில் தேங்காய் எண்ணையை பயன் படுத்தலாம். தேங்காய் எண்ணெய் உதட்டில் தடவும் பொழுது வழு வழு வென இருந்தாலும், ஈரப்பதத்தை கொடுத்து வறட்சி ஏற்படாமல் தடுக்கும்.
தேங்காய் எண்ணெய் உதட்டில் தடவி ஒரு நிமிடத்தில் துடைத்து விடலாம். நாள் முழுதும் தடவ வேண்டிய அவசியம் இல்லை.
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால், அது சருமத்துக்கு ஊட்டம் அளித்து ஈரபதத்துடன் வைத்திருக்கும்.
வெயில் காலத்தில் உடலில் நீரேற்றம் குறைந்து விடும். இதனால் நீரிழப்பு வறட்சி ஏற்பட்டு, உதடு வெடிப்பிற்கு காரணமாகிறது.
வெளியே செல்லும் பொழுது முககவசம், தொப்பி என அணிந்து செல்வது சிறந்தது. இதனால் நேரடியாக வெப்பம் முகத்தை தாக்காமல் இருக்கும்.