தீரா தலைவலிக்கான தீர்வு..!
சில மனிதர்களுக்கு காலையில் தூங்கி எழும்பொழுதே தலைவலி இருக்கும். ஆனால், காலையில் காபி, டீ, குடித்தாலே தீர்ந்து விடும். என நினைத்து கொண்டு இருப்பார்கள். இருந்தும் தலைவலி தீராமல் தான் இருக்கும். அதை சரி செய்ய வழி தான் என்ன ? பதில் சொல்கிறார் மருத்துவர் பாபு நாராயணன்.
தலைவலியில் கூட ஒற்றை தலைவலி, தலையை சுற்றி கழுத்து நரம்பிலும் வலி, கண்களில் கண்ணீர் வருவது, என பல விதமான தலைவலிகள் உண்டு .
காலையில் எழுந்ததும் தலைவலி வருவதற்கான காரணம் கண்டு தீர்வு சொல்ல முடியுமே தவிர, அதை முழுவதுமாக சரி செய்வது, சாத்தியமில்லை.
இரவில் சரியாக சாப்பிடாமல் உறங்க சென்றால், காலையில் தலைவலி ஏற்படும். காலையில் எழுந்ததும் ஒரு சொம்பு தண்ணீராவது குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல், சூடான டீ,காபி என குடித்தால் குடலுக்குள் சென்று இன்னும் தலைவலியை அதிகப்படுத்தும்.
ஒற்றை தலைவலிக்கான காரணம், மூளை என்றும் ஏதாவது ஒரு சிந்தனையில் இருப்பதுதான்.
இதை சரி செய்ய மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த ப்ளாக் டீ, குடித்தால் போதும். இதனால் சைனஸால் ஏற்படும் தலைவலி கூட நீங்கும்.
தலைவலி குறைய :
கண்களை மூடி இடது கை கட்ட விரலால், இரைப்பைக்கு மேல் உள்ள நெற்றி பகுதியில் மிதமான அழுத்தம் கொடுக்கலாம்.
இரண்டு உள்ளங்கை களையும் தேய்த்து கண்களின் மேல் வைத்து சூடு கொடுக்கவும். இதனால் கைகளில் உள்ள சூடு கண்களில் இறங்கும் பொழுது நரம்பு சீராகும்.
கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். பின் முகத்தில் தண்ணீரை வேகமாக தெளித்து, முகம் கழுவ வேண்டும்.
நாள் முழுவதும் நீங்கள், வெயிலில் அலைந்து வேலை செய்பவராக இருந்தால். கார்ன்ஃப்ளேக்ஸ், நைட்ரேட், எம்எஸ்ஜி, கலந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.