தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா (69) உடல் நலக்குறைவால் இன்று மதியம் 1.00 அளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாலை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
69 வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த மனோபாலாவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிகாக வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு இயக்குநர்கள் மணிரத்னம், விக்ரமன், பேரரசு, ஹெச்.வினோத், ஏ.எல்.விஜய், சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர்கள் மோகன், ஆர்யா, தாமு, சிவக்குமார், சித்தார்த் உள்ளிட்ட பிரலகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்றுநேரத்திற்கு முன்பு நடிகர் விஜய் மனோபாலாவின் உடலுக்கு நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜயுடன் மனோபாலா பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.அதன்படி மின்சார கண்ணா, அழகிய தமிழ் மகன், தலைவா, நண்பன், துப்பாக்கி, தேறி, பிகில் போன்ற விஜய் படங்களில் மனோபாலா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கி வரும் விஜயின் லியோ படத்திலும் மனோபாலா நடித்துள்ளார்.
மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு நடிகர் விஜய் அவரது மகன் ஹரிஷ் கையை பிடித்து ஆறுதல் கூறினார். இதுசம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thalapathy Vijay paid his last respect to Manobala. pic.twitter.com/Gxz6uue3DK
— LetsCinema (@letscinema) May 3, 2023