கோலாகலமாக நடைபெற்ற சூலூர் தங்க முத்து மாரியம்மன் கோவில் திருவிழா..!
சூலூர் மாவட்டத்தை அடுத்த ரங்கநாத புரத்தில் உள்ள தங்க முத்து மாரியம்மன் கோவிலில் ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றம் செய்து திருவிழாவை தொடங்கியுள்ளனர்.
பின் அன்று மாலை 3மணிக்கு மேல் அம்மனுக்கு பால் குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 27ம் தேதி பொங்கல் வைக்கும் விழா, ஏப்ரல் 29ம் தேதி பால் அபிஷேகம் என தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. மேலும் நேற்று மாலை பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏந்தி விளக்கு பூஜை செய்து வீதி உலா வந்துள்ளனர்.
அன்று இரவு சிறப்பு அலங்காரத்தில் பக்கதர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். இதனை காண ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்று நேர்த்தி கடனும் செலுத்தியுள்ளனர். வீதி உலா சென்ற பொழுது அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை திருவிழா நிறைவு பெற்றது.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி