மின்சாரத்திற்கு பலியான 13 வயது சிறுவன் – கொருக்குப்பேட்டையில் சோகம்
சென்னை கொருக்குப்பேட்டை புட்டாசெட்டி தெருவில், நேற்று இரவு கருப்பு சாமி கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது.
திருவிழாவிற்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வரேன், என்று சொல்லி விட்டு. தனது பாட்டியுடன் சென்றுள்ளான் கவின் என்ற சிறுவன்.
கோவில் பூசாரி மீது சாமி வந்து அருள்வாக்கு சொல்லி கொண்டு இருக்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த நெரிசலில் அந்த 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட்ட நெரிசலில் தள்ளப்பட்டு அங்கிருந்த அலங்கார விளக்கில் உள்ள ஒரு மரக்கம்பியை பிடித்துள்ளான்.
அதில் விடுபட்ட எலெக்ட்ரிக் ஒயரில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்துள்ளான். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மனதை வருடக்கூடிய சோகம் என்னவென்றால் அந்த தாயிக்கு இவன் ஒரே மகன்.
மின்சாரம் தாக்கப்பட்டத்தை தொடர்ந்து, மின்சாரம் வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அது பற்றி அவர்கள் யாரும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.