கணையத்தை பாதுகாக்க சில டிப்ஸ்..!! இந்த உணவை சேர்த்துக் கொள்ளுங்கள்.!
நமது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ரத்த இன்சுலின் எனும் திரவம் தான், இந்த ரத்த இன்சுலின் உடலின் கணையம் எனும் பகுதியில் இருந்து தான் சுரக்கிறது. கணையம் முக்கியமான ஆர்மோன்கள் மற்றும் நொதிகளை உற்பத்தி செய்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் முக்கியமான திரவங்களை சேர்க்கிறது.
அப்படி ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும் கணையத்திற்கு , நாம் சேர்த்துக்கொள்ள ஆரோக்கியாமான சில உணவுகளை பற்றி பார்க்கலாம்.
பூண்டு : பூண்டில் உள்ள அல்லிசின் கணையத்தில் ஆரோக்கியத்தை உண்டாக்கி, புற்று நோய் கட்டிகள் வாராமல் பாதுகாக்கிறது.
சிவப்பு திராட்சை : ரெஸ்வெரடால் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் ரத்த நாளங்கள் பாதிக்காமல் பாதுகாக்கிறது.
சர்க்கரை வள்ளி கிழங்கு : சர்க்கரை வள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
புரோக்கோலி : சல்பர் காம்பவுண்டுகள் இருப்பதால் கணையப் புற்று ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் கணையத்தின் திசுக்களையும் பாதுகாத்து கொள்கிறது.
மேலும் இதுபோன்ற பல மருத்துவக் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்துப் படித்திடுங்கள்.
வெ.லோகேஸ்வரி