நேற்று (11.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “மோகா” புயலானது நேற்று (11.05.2023) மாலை 1730 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து இன்று (12.05.2023) காலை 0530 மணி அளவில் மிகத்தீவிர புயலாக மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கிலோ மீட்டர் மேற்கு-வடமேற்கே நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கக்கூடும்.
12.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.05.2023 முதல் 16.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
12.05.2023 முதல் 16.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
14.05.2023, 15.05.2023 & 16.05.2023 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.