ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கலாச்சாரம் என்ற வகையில் இருந்தாலும் கூட அதில் துன்புறுத்தல் என்று வரும்பொழுது அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.