குழந்தைகளுக்கு அதிகம் கோபம் வருவதற்கு இது தான் கரணம்..?
14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குறும்பு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவிற்கு கோபமும் இருக்கும். அதற்கான காரணம் பெற்றோர்கள் மட்டுமே.. இந்த சார் வயதில் வரும் கோபத்தை குறிப்பது மிகவும் சவாலான ஒன்று..
குழந்தைகளுக்கு கோபம் வருவதற்கான முதல் காரணம்.., பெற்றோர்கள் தான். தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நோக்கில் ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுத்து விடுகிறாரார்கள்.
அதில் அவர்கள் விளையாடும் கேம்ஸ், பார்க்கும் வீடியோக்களுக்கு அடிட் ஆகி விடுகின்றனர். அதில் இருந்து அவர்களை விடு வீக்க வைப்பதாக நினைத்து.., மொபைல் போனை பிடுங்கும் பொழுது அழத் தொடங்குவார்கள்.
ஒரு சிலர் பெற்றோர்கள் குழந்தை அழுகிறது என.., மொபைல் போனை கொடுத்து விடுவார்கள். ஒரு சிலர் அந்த நேரத்தில் தான், குழந்தையை போட்டு அடிப்பார்கள். இது இரண்டுமே தவறான ஒன்று.
அப்படி நாம் அவர்களை அதிக கோபத்திற்கு ஆளுக்கும் பொழுது.., வீட்டில் உள்ள பொருட்களை தூக்கிபோட்டு உடைப்பார்கள், அல்லது உடன் பிறப்புகளுடன் சண்டை இடுவார்கள்.
இந்த கோபமும் மன வலியும், அதிகமாகும் பொழுது அது குழந்தையின் மூளையை தான் அதிகம் பாதிக்கும்.
இதை எப்படி சரிசெய்வது என்பது பற்றி அடுத்த குறிப்பில் பார்க்கலாம்..,
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் பற்றிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.