எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஆளுநர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர், முக்கியமாக கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தமிழகத்தில் அனேக இடத்தில் கள்ள சாராயம் விற்பதும் சட்ட ஒழுங்கு பிரச்சினை முறைகேடுகளை குறித்தும் வருகின்ற 22 ஆம் தேதி பேரணையாக சென்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். ஆகையால் இதுகுறித்து தெரிவித்து ஒப்புதல் பெறவும், அதிமுக நடத்தும் பேரணிக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் காவல் ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், டிடிவி போன்று பல தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்து பின்பு ஆர் கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஜெயித்து வந்தவர்கள் போல் நாங்கள் வரவில்லை. பணத்தை வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை. புரட்சித்தலைவர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வழியில் நாங்கள் கட்சியை நடத்தி வருகிறோம்.
பதவிக்காக பல் இழுத்து விட்டு சுயமரியாதை இழந்து இருப்பவர்கள் நாங்கள் இல்லை, 1998 இல் ஒரத்த நாட்டில் முதல் முதலில் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்தவன் நான் அப்படி இருப்பவர் எடப்பாடி குறித்து தேவையில்லாமல் பேசக்கூடாது.
உளவுத்துறை பொறுத்தவரை அவர்கள் சுட்டிக்காட்டும் குற்றங்களை திமுக அரசும் முதலமைச்சரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் குற்றங்கள் நடைபெற்று வருகிறது என குற்றச்சாட்டினார்.