கூந்தல் பாரமரிப்பிற்காக சில டிப்ஸ்..!!
* வடிகட்டிய டீ இலை தூளை எலும்பிச்சை பழம் சாற்றில் கலந்து.., தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி ஷைனிங் ஆக இருக்கும்.
* சின்ன வெங்காயத்துடன்.., தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆரிய பின் தலையில் மசாஜ் செய்த படி தேய்க்க வேண்டும். பின் ஷாம்பூ போட்டு தலையை அலசி வந்தால் முடி மென்மையாக இருக்கும்.
* சாதம் வடித்த வடி நீரில் சீயக்காய் வைத்து தலைக்கு குளித்தால்.., முடி கொட்டுவது நின்று விடும்.
* எலும்பிச்சை பழம் சாரும் தேங்காய் எண்ணையும் சேர்த்து தலையில் தடவி வந்தால் பேன், பொடுகு தொல்லை இருக்காது.
* சிறிதளவு தேங்காய் எண்ணையில், செம்பருத்தி பூ மற்றும் இஞ்சி, பூண்டு, எலும்பிச்சை பழம் சேர்த்து தினமும் தலைக்கு தடவி வந்தால் கூந்தல் கருமையாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி