குழந்தைகளுக்கு பலாப்பழம் கொடுக்கலாமா..?
குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு மிகவும் சவால் நிறைந்த ஒன்று.., எந்த வயதில் சரியான ஊட்டசத்து கொடுக்க வேண்டும். அது அவர்கள் உடலுக்கு ஏற்றவாறு இருக்குமா..? என்று பல கேள்விகள் இருக்கும்.
கடந்த சில நாட்களாக குழந்தைகள் வளர்ப்பு பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது ஆறு வயதில் இருந்து இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பலாபழம் கொடுக்கலாமா என்பது தான். அதற்கான விளக்கம் இதோ உங்களுக்காக
பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மற்றும் வைட்டமின் கே, மற்றும் மக்னீசியம் இருப்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
பலாபழம் சாப்பிடுவதால் ரத்த அழுத்த நிலையை சீராக வைக்க உதவும்.
ஆனால் இதை 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பழத்தை அப்படியே கொடுக்கலாம்.
ஒரு வயதில் இருந்து இரண்டு வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு பழத்தை துண்டு துண்டாக வெட்டி கொடுக்க வேண்டும்.
ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பலாபழத்தை வேக வைத்து பின் நன்கு மசித்து அல்லது மிக்ஸியில் அரைத்து கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.