காதலிப்பதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய வாலிபர் சிக்கியுள்ளார்..!
காதல் என்ற பெயரில் பல பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுபவர் தான் இந்த “கார்த்திக்”. இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கல்லூரி படிக்கும் பொழுது தண்ணீர், தம் என்று சுத்தியால்.., இடைநிறுத்தம் செய்யப்பட்ட இளைஞர்.
முக்கியமாக வேலை தேடி அலையும் ஒரு பட்டதாரி ஆனால் இவர் பெண்களிடம் கூறுவது என்னவென்றால். நான் Phd வரை முடித்து இருக்கிறேன், ஒரு ஐடி கம்பெனியில், மேனேஜராக பணிபுரியும் இளைஞர் என்று கூறுவது.
வாடகை வீட்டிற்கு வாடகை கூட தரமுடியாத இவர், சொந்தமாக வீடு, சூப்பர் மார்க்கெட் மற்றும் பெட்ரோல் பங் என உள்ளது என கூறுவார். பேங்க் அக்கௌன்ட்டில் 10 ரூபாய் கூட இல்லாத இவர், பேங்க் அக்கௌன்ட்டில் எனக்கென்று 25 லட்சம் இருக்கிறது என்று தான் சொல்லுவாராம்..
இப்படி எல்லாம் பேசும் இவர் சிக்கியது எப்படி..? என்று நீங்கள் நினைக்கலாம்.., அந்த சம்பவம் இதோ.
பல பெண்களிடம் இதே போல் பேசி காதலித்து ஊரெல்லாம் சுற்றி, காதலிக்கும் பொழுது எடுத்துக்கொள்ளும் புகைப்படம் மற்றும் மெசேஜ்களை வைத்து பிளாக் மெயில் செய்வது வழக்கம்.
இந்த பழக்கத்தை மாற்றாத கார்த்திக், அபி என்ற ஒரு பெண்ணை காதலிப்ப தாக கூறியுள்ளார்.., அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு ஆறுமாதமாக இது தொடர்ந்துள்ளது. ஒரு நாள் என் அப்பா உன்னிடம் பேச வேண்டும் என சொல்லி ஒருவரை அழைத்துக்கொண்டு வந்து பேச வைத்தான்.
அந்த வயதான நபரும்..” என் மகன் உன் மேல உயிரா இருக்கான் மா”, உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசை படுறான். நீ சரி சொன்ன மட்டும் போதும் நாங்க உன் வீட்டில வந்து பேசுறோம் அப்படி சொல்லுறாங்க.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்த அந்த பெண் முதலில் நீங்கள் வீட்டில் வந்து பேசுங்க, வீட்டில் உள்ளவர்களுக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று சொல்லி இருக்கிறாள்.
அதற்கு இந்த பையன் எனக்கு அம்மா கிடையாது, அம்மா இறந்து விட்டார். அம்மா இறந்ததால் அப்பா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது. நான் என் அண்ணன், அண்ணியை அழைத்து கொண்டு வந்து பேசிவிட்டு பின் என் அப்பாவுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்.
அந்த பெண்ணும் சரி என்று சொல்ல .., அந்த பெண்ணின் வீட்டிற்கு கார்த்திக் அவரின் அண்ணா, அண்ணியுடன் அழைத்துக் கொண்டு சம்மதம் பேசியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணின் தாய்மாமா, கார்த்திகை பார்த்ததும் சந்தேகம் எழ, கொஞ்ச நாட்கள் கழித்து தட்டு மாற்றுவது வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கிறார்.
பின் அந்த பையனை பற்றி விசாரித்த போது தான் பல உண்மைகள் வெளியானது. அவனுக்கு அம்மா, இருப்பது உண்மை, சுயமாக வேலை எதுவும் கிடையாது, அண்ணா, அண்ணி, அப்பா என பேச வைத்தவர்கள் அனைவரும் பொய்யான நபர்கள்.
எதற்கு இப்படி செய்தாய் என்று அவனிடம் கேட்டதற்கு.., அவ கிட்ட நான் என் காதல சொன்னா அவ என்ன மதிக்கவே இல்ல அதான் இப்படி பண்ணன் சொல்லியிருக்கிறான்..,
இது குறித்து மேலும் அவனை போலீசில் பிடித்து கொடுக்கும் படி சுற்றியிருந்த உறவினர்கள் சொல்ல.., இப்பொழுது போலீசில் புகார் அளித்தால், நம்ப வீட்டு பெண்ணை தான், போலீசில் கூப்பிட்டு விசாரிப்பார்கள்.
காதலிக்க மறுத்ததற்கே பழி வாங்க இப்படி செய்தவன், இன்னும் போலீஸ் என்று எல்லாம் நம்ப வீட்டு பெண்ணை தான் ஏதாவது செய்வான். இனி பிரச்சனை வேண்டாம் என சொல்லிவிட்டு. அந்த பையனை கண்டித்து அனுப்பியுள்ளார்கள்.
வெ.லோகேஸ்வரி