127 Total Views , 2 Views Today
குழந்தைக்கு பல் முளைத்ததும் கொடுக்க வேண்டிய உணவுகள்..!
குழந்தை பராமரிப்பு என்பது பெற்றோர்களுக்கு மிகவும் சவால் நிறைந்த ஒன்று.., முக்கியமாக பிறந்த குழந்தை வளர்ப்பு.
குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆனதும் பற்கள் முளைக்க துவங்கி விடும். அந்த சமயத்தில் அவர்கள் கண்டதையும் கடிக்க செய்வார்கள், சில சமயம் வீட்டில் உள்ளவர்களை கூட. அதற்கு காரணம், அவர்களின் பல் ஈரல் ஊரும் பொழுது ஒரு விதமான வலி ஏற்படும்.
அந்த சமயத்தில் எதையாவது கடித்து பற்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றும் எனவே, குழந்தைகள் எதையாவது கடித்துக்கொண்டே இருக்க விரும்புவார்கள்.
சில குழந்தைகள் அந்த வலி தாங்காமல் அழ தொடங்கி விடுவார்கள், எனவே ஒரு சில பெற்றோர்கள் குழந்தையின் பற்களுக்கு ஊரும் வைகையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பார்கள்.
அதற்கு பதிலாக.., இதை செய்யலாமே.
கேரட் : கேரட்டை மென்று சாப்பிடும் பொழுது, பற்கள் ஊறுவதற்கு இதமாக இருக்கும். மேலும் கேரட் குழந்தையின் உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
சீஸ் : சீஸ் குழந்தையின் ஈறில் உள்ள வலியை குறைக்க உதவும்.
பயிறு : பயிறு வகையான பொருட்களை குழந்தைகள் சாப்பிடும் பொழுது சீக்கிரம் பற்கள் முளைக்க உதவுமாம்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்கள் வளர்ச்சிக்கு உதவும்.
ஆப்பிள் : ஆப்பிள் பற்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும், முக்கியமாக பல் வலி மற்றும் பல் ஊறுதல் பிரச்சனையை ஏற்படுத்தாது.
பொறி : பொறி மொறு மொறு வென இருந்தாலும் வாயில் போட்டதும் பஞ்சு போல ஆகிவிடும். இது குழந்தைக்கு பல் முளைக்க உதவும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.