அழகான சருமத்திற்கு தேவையான அசத்தலான டிப்ஸ்..!
சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது..? அதுவும் அடிக்குற வெயிலுக்கு முகம் எப்பவும் கருத்து போகாம இருக்க பல கீரிம் பயன் படுத்துவோம். ஆனால் இயற்கையாகவே முகத்தை அழகாக வைக்க சில டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.
* ஒரு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து நன்கு மிஸ்யில் அரைத்து அதன் சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ளும் சாரின் அளவிற்கு தேனும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும். அதை அரைமணி நேரம் முகத்தில் ஊற வைத்து, பின் முகம் கழுவினால் முகம் அழகாக இருக்கும்.
* பப்பாளி பழத்தின் சாறை எடுத்து முகத்தில் பூசினால், முக வடுக்கு குறைந்து விடும்.
* இளஞ்சூடான பாலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் பூசி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், முகம் பொலிவுடன் இருக்கும்.
* வெறும் தயிரை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் வெயிலின் தாகத்திற்கு முகம் கருக்காமல் இருக்கும்.
* முகம் சுருக்கம் மறைய கசகசாவை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகம் சுருக்கம் வராமல் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
– வெ.லோகேஸ்வரி