ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான – அஞ்சு டிப்ஸ் 14
உடலை ஆரோக்கியாமாக வைத்துக்கொள்ள தேவையான சில டிப்ஸ்கள்
சிவப்பு பூசணி : கரோட்டின், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் வாரத்திற்கு ஒரு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.
கத்தரிக்காய் : உடல் இயக்கம் சீராவதற்கு கத்தரிக்காய் பயன்படுகிறது. மேலும் இது வாய்ப்புண்களை குணப்படுத்தும். ஆனால் கத்தரிக்காயில் அரிப்பு தன்மை இருப்பதால் அலர்ஜியை ஏற்படுத்தும்.
எனவே கத்தரிக்காயை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
புடலங்காய் : புடலங்காயில் நீர்ச்சத்து இருப்பதால் இதயநோய், சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு.
அவரைக்காய் : அவரைக்காயை எந்த வயதினரும் எடுத்துக்கொள்ளலாம், மேலும் இதில் அதிக புரத்தச்சத்து இருப்பதால் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு.
அவரைக்காயை குழந்தைபெற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
வெண்டைக்காய் : கர்ப்பிணி பெண்கள் தினமும் எடுத்துக்கொண்டால் கருவில் உள்ள குழந்தைக்கு அதிக ஆற்றலை கொடுக்கும்.
மேலும் வெண்டைக்காயில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு அதிகம் உதவும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ. லோகேஸ்வரி