அடையாறு, பக்கீம், கூவம் போன்ற ஆறுகளில் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. கழிவு நீரை சுத்தப்படுத்தி மீண்டும் நீரை ஆற்றுக்குள் விடும் பணிகளுக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல நகரங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலக்கிறது வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுரை 2 ஆம் தலைநகர் மாற்றுவதற்கு அமைச்சர் மூர்த்தி கேட்டதற்கு பதில் அளித்தேன். 2 வது தலைநகர் குறித்து முதல்வர் தான் அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.