குழந்தைகளுக்கு மருந்து தரும் பொழுது இதை கவனிக்க மறக்காதீர்கள்..!
நோய்வயப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவர் எழுதி தரும் மருந்தை கொடுத்தால் மட்டும் போதாது. அதனுடன் இதையும் பின் பற்ற மறக்காதீர்கள்.
* மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க கூடாது. குறிப்பாக மெடிக்கல் ஷாப் சென்று மருந்து வாங்கி பயன்படுத்துவது.
* குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தை ஒரு தனிப்பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
* குழந்தைகள் வயது மற்றும் எடைக்கு ஏற்ப மருந்தீன் வீரியம் இருக்கும் எனவே ஜொரம் மற்றும் சளி என்று வரும் பொழுது மற்ற குழந்தைக்களுக்கு தரும் மருந்தை உங்கள் குழந்தைக்கு தரக் கூடாது.
* அளவுக்கு அதிகமான மருந்து மாத்திரை கொடுப்பதை தவரிக்கலாம், இதனால் குழந்தைகளின் கல்லீரல் அதிகம் பாதிக்கப்படும்.
* மருத்துவர்கள் அறிவுறுத்தும் காலம் வரை குழந்தைக்கு மருந்து கொடுத்தால் போதும். மருந்து கொடுத்ததும் உடல் நிலை சரியாகவில்லை என்றால் மீண்டும் மருத்துவரை சந்தித்து வேறு மாத்திரை கேட்டு வாங்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.