ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா..!
சோழவந்தான் கிராமத்தை சேர்ந்த ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழா தொடக்கத்தின் ஏழாவது நாளான நேற்று.., காலை அம்மன் விநாயகர் கோவில் வரை வீதி உலா வந்தார்.
விநாயகர் கோவிலில் பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து, அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மரக்கன்று வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பால் குடம், முளைப்பாரி மற்றும் தீச்சட்டி எடுத்து வழிபட்டனர். அன்று மாலை அம்மன் பூ அலங்காரத்தில், குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.