89 Total Views , 1 Views Today
செங்கோல் விஷயத்தில் இது புனை கதை..! உண்மையை சொன்ன ப.சிதம்பரம்..!
நாடாளு மன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் “ப.சிதம்பரம்” பேசியுள்ளார்.
புதுடெல்லியில் பிரதமர் மோடியால் நிறுவப்பட்ட, புதிய நாடளுமன்ற கட்டிடத்தில். சபாநாயகர்களின் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது,
தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும். செங்கோல் இப்போதுதான் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்துள்ளது. ஒரு நல்ல நீதி ஆட்சியின் அடையாளமாக இருக்கும் செங்கோல்.
சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது. புனிதமான செங்கோலின் பெருமை மற்றும் புகழை மீட்டெடுக்க முடிந்தது. இது எங்களுக்கு கிடைத்த அதிஷ்டம்.
ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அதிகார பகிர்வுக்கு பயன்படுத்தப்பட்ட செங்கோலுக்கு உரிய மதிப்பை நாங்கள் கொடுத்துள்ளோம். என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டிருப்பதை பல எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றிய புனை கதைகள் அதிகமாகி கொண்டே வருகிறது.
செங்கோல் பற்றி ஆளுநர் கூட ஒரு துணைக் கதையை கூறியுள்ளார். நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை இரு வரலாற்று ஆசிரியர்கள் எழுதி இருக்கின்றனர். 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, மவுண்ட் பேட்டன் பிரபு டெல்லியில் இல்லை பாகிஸ்தானில் இருந்தார், என்பது வரலாறு ஆசிரியர்களின் கூற்று.
வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டும் தான் உண்மையான வரலாறு, மற்றவர்கள் கூறுவது எல்லாம் வெறும், புனையப்பட்ட ஒன்று. இது மாதிரியான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். என பேசினார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.