அழகான சருமத்திற்கு அசத்தலான டிப்ஸ்..!
முகம் என்றும் அழகாகவும் பொலிவுடனும் இருக்க பல பேஷ்வாஷ் மற்றும் ஃபேஸ்பேக் பயன் படுத்துவோம்.., என்னதான் செய்தாலும் ஒரு சிலருக்கு வெயிலில் முகம் கருக்க தான் செய்கிறது.
அப்படி முகம் கருக்காமல் இருக்க சில இயற்கை பேஷ்ஃபேக் பற்றி பார்க்கலாம்.
முட்டைகோஸ் ஃபேஸ்பேக் :
முட்டைகோஸை எடுத்து நன்கு அரைத்து அதன் சாற்றை எடுத்துக்கொள்ளவும். அந்த சாற்றில் சிறிதளவு மஞ்சள் தூள், 1ஸ்பூன் தேன், மற்றும் கடலை மாவு கலந்து, முகத்தில் பூசவும். பின் 20நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவ வேண்டும், வாரத்திற்கு இருமுறை செய்தால் முககருமை நீங்கி விடும்.
கற்றாழை ஃபேஸ்பேக் :
மைசூர் பருப்பை அரைத்து பொடி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் கற்றாலை ஜெல், அரைத்த தக்காளியை சேர்த்து கழுத்து மற்றும் முகத்தில் பூசி 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகம் கழுவ வேண்டும்.
முகத்தில் உள்ள கருமையை நீக்குவதோடு இழந்த செல்களையும் நீக்கி விடுகிறது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..